செய்திகள்

அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள் (தமிழ்) – மக்கள் பதிப்பு வெளியீடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.1.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மக்கள் பதிப்பாக முதல் 10 தொகுதிகளை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு வே.ராஜாராமன். இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள், புலவர் செந்தலை ந.கவுதமன், பேராசிரியர் வீ. அரசு, பேராசிரியர் முனைவர் மு. வளர்மதி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் மேனாள் துணை இயக்குநர் திரு. அ. மதிவாணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாண்மை இயக்குநர் திரு. க. சந்தானம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.