செய்திகள்

தேனி மாவட்டம் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு ஆட்சிமொழிக் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கிவைத்து, சிறந்த வரைவுகள் குறிப்புகள் எழுதியமைக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு காசோலைப் பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்கள்.

தேனி மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு ஆட்சிமொழிக் கருத்தரங்கை இன்று தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா இ.ஆ.ப. அவர்கள் தொடங்கிவைத்து பேரூரரையாற்றினார்கள் . நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக் கருவூல அலுவலர், தமிழ்ச்செம்மல் தேனி சீருடையான், தமிழறிஞர் அல்லி உதையன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

2021 ஆம் ஆண்டிற்கு சிறந்த வரைவுகள் குறிப்புகள் எழுதியமைக்கு பரிசுக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு காசோலைப் பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா இ.ஆ.ப. அவர்கள் நூற்றாண்டுவிழா ஆட்சிமொழிக் கருதரங்க நிகழ்வில் வழங்கிச் சிறப்பித்தார்கள்.