செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டம் – பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்ட அளவில் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களிடையே கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் இன்று 03.07.2023 திருப்பத்தூர், தொமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கில் நடத்தப்பெற்றன. போட்டிகளில் மொத்தம் 200 மாணாக்கர்கள் பங்கேற்றனர். கவிதைப் போட்டியில் 59 மாணாக்கர்கள் பங்கேற்றனர் (43 மாணவியர், 16 மாணவர்கள்). கட்டுரைப் போட்டியில் 74 மாணாக்கர்கள் பங்கேற்றனர் (53 மாணவியர், 21 மாணவர்கள்). பேச்சுப்போட்டியில் 67 மாணாக்கர்கள் பங்கேற்றனர் (39 மாணவியர், 28 மாணவர்கள்). பங்குபெற்ற மாணாக்கர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பெற்றன.

 

திருப்பத்தூர் மாவட்ட அளவில் கல்லூரி மாணாக்கர்களிடையே கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் இன்று 03.07.2023 திருப்பத்தூர், தொமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கில் நடத்தப்பெற்றன. போட்டிகளில் மொத்தம் 28 மாணாக்கர்கள் பங்கேற்றனர். கவிதைப் போட்டியில் 09 மாணாக்கர்கள் பங்கேற்றனர் (06 மாணவியர், 03 மாணவர்கள்). கட்டுரைப் போட்டியில் 09 மாணாக்கர்கள் பங்கேற்றனர் (07 மாணவியர், 02 மாணவர்கள்). பேச்சுப்போட்டியில் 10 மாணாக்கர்கள் பங்கேற்றனர் (08 மாணவியர், 02 மாணவர்கள்). பங்குபெற்ற மாணாக்கர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பெற்றன.