செய்திகள்

தமிழ் வளர்ச்சித் துறை – திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

இன்று (15.05.2023) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில், தமிழ் வளர்ச்சித் துறை மூலம் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.