செய்திகள்

‘திராவிட மொழிகளின் ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்’ அவர்களின் 209-வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் மலர் வணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

‘திராவிட மொழிகளின் ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்’ அவர்களின் 209-வது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு 07.05.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் மலர் வணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மேயர், துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர், தென்னிந்திய திருச்சபையினர் மற்றும் அரசு அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.