சிறப்புச் சொல் துணையகராதி

அரசின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டுவரும் கலைச் சொற்கள் தொகுக்கப்பெற்றுத் தமிழாக்கம் செய்யப்பட்டு துறைவாரியான 75 சிறப்புச் சொல் துணை அகராதிகள் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்தன. தற்பொழுது அனைத்துத் துறைச் சொற்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாக வெளியிடப்படுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.