தமிழறிஞர்களுக்கு நிதியுதவி

தமிழுக்கும் தமிழ்மொழிக்கும் தொண்டாற்றித் தமது சான்றாண்மையை வெளிப்படுத்தும் வகையில் தொண்டு புரிந்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களின் மறைவுக்குப்பின் அவர்தம் மரபுரிமையர்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
திங்கள்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் விவரம்
அ) தமிழறிஞர்-ரூபாய் 4,500/- + ரூபாய் 500/- மருத்துவப்படி
ஆ) தமிழறிஞரின் மரபுரிமையர்-ரூபாய் 2,500/- + ரூபாய் 500/- மருத்துவப்படி
இத்திட்டத்தின்கீழ் தற்போது உதவித்தொகை பெற்று வரும் தமிழறிஞர்/தமிழறிஞர்களின் மரபுரிமையர் எண்ணிக்கை
அ) தமிழறிஞர் 1104 பேர்
ஆ) தமிழறிஞர்களின் மரபுரிமையர் 958 பேர் ——-
மொத்தம் 2062 பேர் ——-
திங்கள்தோறும் வழங்கப்பட்டுவரும் உதவித் தொகை தவிர, இவர்களுக்குத் தமிழ்நாடு முழுவதும் சென்று தமிழ்ப்பணியாற்ற ஏதுவாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கட்டணமில்லாப் பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது.