குறள் பரிசு

இளம்வயதில் மாணவ மாணவியரின் மனத்தில் திருக்குறளின் அறநெறிக் கருத்துகள் ஆழமாய்ப் பதிய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் பள்ளி / கல்லூரி மாணவருக்குப் பரிசுத்தொகையாக ரூபாய் 10,000/- வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் 2015-2016 ஆம் ஆண்டு முதல், பரிசு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 36-லிருந்து 50 ஆக உயர்த்தப்பட்டு, பரிசு வழங்கிட ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டு முதல், பரிசு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 50-லிருந்து 70 ஆக உயர்த்தப்பட்டு,பரிசு வழங்கிட ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 279 மாணவர்களுக்குக் குறள் பரிசு வழங்கப்பட்டுள்ளது.