உலகத் தாய்மொழி நாள்

ஆண்டுதோறும் பிப்ரவரித் திங்கள் 21ஆம் நாளன்று தமிழகத்தில் தாய்மொழிநாள் கொண்டாடப்படும் என 2013-14ஆம் ஆண்டு மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்டதற்கிணங்க, 2014ஆம் ஆண்டு முதல்
உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரித் திங்கள் 21ஆம் நாள் தாய்மொழி நாளாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் கலைநிகழ்ச்சிகள், கவியரங்கம், கருத்தரங்கம் ஆகியவை நிகழ்த்தப் பெறுகின்றன. 2017ஆம், 2018ஆம் ஆண்டு இவ்விழா உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது.