ஆட்சிமொழிப் பயிலரங்குகள்

அரசுப் பணியாளர்களுக்கு ஆட்சிமொழித் திட்டச் செயற்பாட்டில் ஏற்படும் இடர்ப்பாடுகளைக் களையும் நோக்கில் ஆட்சிமொழி வரலாறும் சட்டமும், ஆட்சிமொழிச் செயலாக்கம், குறிப்புகள், வரைவுகள் எழுதுதல், பிழைநீக்கி எழுதுதல் மற்றும் குறை களைவு நடவடிக்கைகள் ஆகிய தலைப்புகளில் ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ரூபாய் 50,000/- வீதம் 32 மாவட்டங்களுக்கு ரூபாய் 16 லட்சம்  செலவில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சிமொழிப் பயிலரங்குகள் ஆண்டுதோறும் இரண்டு நாள்கள் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றன. கணினியுகத்திற்கேற்ப இந்நிதியாண்டு முதல் அரசுப் பணியாளர்களுக்கு மின்காட்சியுரை மூலம் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.