ஆட்சிமொழிச் சட்டவாரம்

ஆட்சிமொழிச் சட்டவாரம்

2019-2020ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ஆம் நாளை நினைவுகூரும் வகையில் ஆட்சிமொழிச் சட்டவாரம் ஆண்டுதோறும் ஒருவாரக் காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் பின்வரும் நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்று ஆட்சிமொழிச் சட்ட வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

  • அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களுக்குக் கணினித் தமிழ்
    விழிப்புணர்வுக் கருத்தரங்கம்.
  •  ஒருங்குறி பயன்பாடு குறித்த பயிற்சி.
  • ஆட்சிமொழி மின்காட்சியுரை விளக்கப் பயிற்சி
  • ஆட்சிமொழிப் பட்டிமன்றம்.
  • தமிழில் வரைவுகள், குறிப்புகள் பிழையின்றியும் பிறமொழிக் கலப்பின்றியும் எழுதிடப் பயிற்சி
  • வாணிக நிறுவனங்கள் / கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் வணிக அமைப்பு நிருவாகிகளுடன் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்படுதல் குறித்துக் கலந்துரையாடல் கூட்டம்
  • வாணிக நிறுவனங்கள் / கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்க வலியுறுத்தித் தமிழறிஞர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பதாகை ஏந்தி பேரணி நடத்திடல்.
  • ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டங்கள்