அரசு அலுவலகங்களுக்குக் கேடயம்

ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கும் தலைமைச் செயலகத் துறை அலுவலகம்/துறைத்தலைமை அலுவலகம்/மாவட்ட ஆட்சியர் அலுவலகம்/அரசு பொதுத்துறை நிறுவனத் தலைமை அலுவலகம் ஆகிய அலுவலகங்களைப் பாராட்டும் வகையில் கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறுகின்றன. அதேபோன்று ஆண்டுதோறும் மாவட்ட நிலை அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்தும் ஓர் அலுவலகத்திற்குக் கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.