அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்

கணினியுகத்திற்கேற்பத் தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 2016-17 மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க, கணினியில் ஆங்கில மொழிக்கெனப் பிழை திருத்தி, சொல் திருத்தி வசதிகள் இருப்பதைப்போல், தமிழில் ஒற்றுப்பிழை, சந்தி, மயங்கொலி உள்ளிட்ட இலக்கணப் பிழைகள் ஏதுமின்றி எழுதத்தக்க வகையிலும், தவறுகளைத் தானே சுட்டிக்காட்டித் திருத்திக்கொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள ரூபாய் 300/-மதிப்புள்ள அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர் மென்பொருள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் 16.5.2017ஆம் நாளன்று வெளியிடப்பட்டது. இதற்கென ரூபாய் 30 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக 10,000 அரசு அலுவலகங்களுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.